பவானி, ஜன.23: பவானி, மெக்கான் வீதியை சேர்ந்தவர் ஆனந்தன் (71). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 15 வருடமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நோயின் பாதிப்பு அதிகமானதால் அதனை தாங்க முடியாத ஆனந்தன் வீட்டிலிருந்த மருந்தை குடித்து விட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ந்தார்.
அங்கிருந்து ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆனந்தன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post பவானியில் முதியவர் சாவு appeared first on Dinakaran.