பவன் கல்யாணுக்கு எதிராக புகார் அளித்த மதுரை வழக்கறிஞரிடம் போலீஸ் விசாரணை

7 months ago 36

மதுரை: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது புகாரளித்தது தொடர்பாக மதுரை வழக்கறிஞரிடம் சைபர் க்ரைம் போலீஸார் இன்று நேரில் விசாரணை நடத்தினர். புகார் குறித்த டிஜிட்டல் ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டன.

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் இரு மாநில மக்களிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி கடந்த 4-ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் என்பவர் புகார் ஒன்றை அளித்தார். இப்புகார் தொடர்பாக விசாரணை நடத்த மனுதாரர் என்ற அடிப்படையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு சைபர் க்ரைம் போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

Read Entire Article