பழையவர்களை ஒதுக்கி ‘பசை’ உள்ளவர்களுக்கே பதவியா? - புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக புகார்களை அடுக்கும் தவெக-வினர்!

4 months ago 11

“விஜய்யை ஓரங்கட்டிவிட்டு தன்னை முன்னிலைப்படுத்த நினைக்கிறார் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்” என தவெக வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக வெளியாகி இருக்கும் ஆடியோ புயலைக் கிளப்பி இருக்கும் நிலையில், பழையவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு ‘பசையுள்ள’ நபர்களை பதவியில் அமரவைக்க துடிப்பதாக புஸ்ஸிக்கு எதிராக அடுத்த புயல் கிளம்பி இருக்கிறது.

“கட்​சிக்காக உழைப்​பவர்​களுக்கும் அந்தக் காலத்தில் சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டிய​வர்​களுக்கும் உரிய அங்கீ​காரத்தைத் தரவேண்டும் என விஜய் அறிவுறுத்தி இருப்பதாக புஸ்ஸி ஆனந்த் சொல்லி வருகிறார். ஆனால், அதற்கு நேர்மாறான வேலைகளை ஆனந்த் ஊக்கு​விக்கிறார் என தவெக-​வினர் புலம்​பு​கிறார்கள். கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மீதான ஆனந்தின் அணுகுமுறை தொண்டர்கள் மத்தியில் வெறுப்பை வளர்த்து​வருவதாக நிர்வாகிகள் புலம்​பு​கின்​றனர்.

Read Entire Article