அரக்கோணம்: கல்லூரி மாணவிக்கு ஆதரவாகவும், திமுக அரசைக் கண்டித்தும் அரக்கோணத்தில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த காவனூரைச் சேர்ந்தவர் தெய்வா (எ) தெய்வச்செயல்(40). அரக்கோணம் மத்திய ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர். அரக்கோணம் அடுத்த பரித்திபுத்தூரைச் சேர்ந்தவர் ப்ரீத்தி(21). கல்லூரி மாணவி.ஏற்கெனவே திருமணமான இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்கிறார்.
இந்நிலையில், ப்ரீத்தியை சில மாதங்களுக்கு முன்பு தெய்வா சந்தித்து, அவரைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடந்த ஜன. 30-ம் தேதி அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இருவரும் அரக்கோணத்தில் வசித்து வந்தனர்.