சிவகங்கை, ஜன.6: சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 8வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் பாண்டி தீர்மானங்களை முன்மொழிந்தார். மாவட்ட துணைத் தலைவர் லூயிஸ்ஜோசப் பிரகாஷ் வரவேற்றார். சிஐடியு மாவட்டத் தலைவர் வீரையா தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கண்ணதாசன் மற்றும பல்வேறு சங்க நிர்வாகிகள் சேகர், உடையணசாமி, மாரி, பாண்டி, முத்தையா வழ்த்திப் பேசினர். புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்டத் தலைவராக ஜோசப்பிரகாஷ், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளராக பெரியசாமி மற்றும் துணை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் மாவட்ட செயலாளர் பாண்டி நிரைவுரையாற்றினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊரகவளர்ச்சி, ஊராட்சி துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வெளி முகமை அரசு ஊழியர்களை பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும். புதிய ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும். பெண் ஊழியர் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தனபால் நன்றி கூறினார்.
The post பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: ஊரக வளர்ச்சி துறையினர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.