பழுதடைந்துள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்

4 months ago 10

 

ராமநாதபுரம், ஜன.6:ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், நகர்மன்ற தலைவர் கார்மேகம் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் வரவேற்றார்.

கூட்டத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறும்போது, ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் மூலம் நடந்து வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். பணிகள் முடிவுற்ற பகுதிகளில் சாலைகளை உடனடியாக சீரமைத்திட வேண்டும். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வீடுகளுக்கு தனி இணைப்பு வழங்கிடும் வகையில் வடிவமைப்புகள் சரியான முறையில் அமைத்திட வேண்டும். நகராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளும் பகுதிகளில் ஆய்வு செய்து பணிகளை கண்காணிப்பதுடன் முடிவுற்ற இடங்களில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாதாள சாக்கடை இணைப்புகள் பழுதடைந்துள்ள பகுதிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களையும் கண்காணித்து பழுதடைந்த பகுதிகளை கண்டறிந்து பழுதுகள் ஏற்படும் பகுதிகளை உடனுக்குடன் சரி செய்து விட வேண்டும் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதன்மை பொறியாளர் முரளி மனோகரன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மகாலிங்கம், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post பழுதடைந்துள்ள பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article