அரூர், பிப்.24: அரூரில் பழுதடைந்து காணப்படும் பொதுப்பணித்துறை குடியிருப்பு வீடுகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரூர் பேரூராட்சியில் 11வது வார்டில் பொதுப்பணித்துறை சார்பில், 100 ஆண்டுக்கு முன்பு 24 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டது. வெளியூரிலிருந்து பணி மாறுதலாகி வரும் அரசு அலுவலர்களின் பயன்பாட்டிற்கென கட்டப்பட்ட வீடுகளில் தற்போது 8 வீடுகளில் மட்டுமே குடியிருந்து வருகின்றனர்.
மீதமுள்ள குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களும் நிறைந்துள்ளது. பொதுப்பணித்துறை வீடுகள் பாழடைந்து கிடப்பதால் அங்கு விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், ‘அரூரில் குடியிருக்க வாடகை வீடுகள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, இது போன்ற பாழடைந்த வீடுகளை சீரமைத்து தந்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், அங்குள்ள கிணற்றை தூர் வாரி தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும்,’ என்றனர்.
The post பழுதடைந்த வீடுகளை சீரமைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.