பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை

6 months ago 22

திருவள்ளூர்,

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளம், பழவேற்காடு கடல் பகுதிக்கு அருகில் அமைந்து உள்ளது. விண்ணில் ராக்கெட் ஏவப்படும் மற்றும் சோதனை பணிகள் மேற்கொள்ளும் காலங்களில், பாதுகாப்பு கருதியும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டும் பழவேற்காடு கடல் பகுதியில், குறிப்பிட்ட சுற்றளவிற்கு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், சூரிய ஒளிவட்ட ஆய்வுக்கான ஐரோப்பிய செயற்கைகோளை சுமந்து கொண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.- சி-59 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்ட் டவுன் இன்று பகல் தொடங்குகிறது.

இந்த நிலையில், ராக்கெட் ஏவப்படுவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மீன்வள கூட்டுறவு சங்கம் மூலமாக திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை பிறப்பித்துள்ளது.   

Read Entire Article