பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை தொடக்கம்

6 days ago 6

பழனி,

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து, முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு வாய்ந்தது ஆகும்.

இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை (சனிக்கிழமை) திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை முன்னிட்டு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் உலா வந்து அருள்பாலிக்கிறார்.

விழாவின் 6-நாளான 10-ந் தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், அடுத்த நாள் பங்குனி உத்திர தேரோட்டமும் நடைபெறுகிறது. விழாவுக் கான ஏற்பாடுகளை பழனி தேவஸ்தானத்துடன், மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்து வருகிறது. பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி பழனிக்கு பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

Read Entire Article