பழனி முருகன் கோவிலில் செல்போன் பாதுகாப்பு நிலையம் மூலம் ஓராண்டில் ரூ.1.50 கோடி வருவாய் என நிர்வாகம் அறிக்கை

3 months ago 26
பழனி முருகன் கோவில் செல்போன் பாதுகாப்பு நிலையம் மூலம் கடந்த ஓராண்டில் 30 லட்சம் பக்தர்கள் பயனடைந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மலைக் கோயில் உள்பிரகாரம் மற்றும் முக்கிய பகுதிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதால் சர்ச்சை ஏற்பட்டதால் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. செல்போன்களை பாதுகாப்பதற்காக, படிப்பாதை ரோப் கார் வின்ச் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் பாதுகாப்பு மையங்கள் கோயில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டு ஐந்து ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் ஓராண்டில்  ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
Read Entire Article