சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் பிஜாப்பூர் மலைப்பகுதியில் 26 நக்சல்கள் சுட்டுக்கொலை

14 hours ago 3

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் பிஜாப்பூர் மலைப்பகுதியில் 26 நக்சல்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சத்தீஸ்கர் எல்லையில் தெலங்கானாவில் உள்ள கரேகுட்டா மலை அருகே அமைந்திருக்கும் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் மாவட்ட ரிசர்வ் போலீசார், சி.ஆர்.பி.எப். வீரர்கள், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்களோடு தெலுங்கானா காவல்துறையினரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தேடுதல் பணியின்போது நக்சல்களுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. அப்போது நடந்த என்கவுன்ட்டரில் இதுவரை 26 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சிஆர்பிஎப் இன் கோப்ரா, டிஆர்ஜி, எஸ்டிஎப் போன்ற சத்தீஸ்கர் காவல் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் உள்பட 12-க்கும் மேற்பட்ட வீரர்கள் இதுவரை காயமடைந்துள்ளனர். கூட்டுப் படைகள் இதுவரை சுமார் 135 வெடிபொருள்களை மீட்டுச் செயலிழக்கச் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் பிஜாப்பூர் மலைப்பகுதியில் 26 நக்சல்கள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article