பழனி முருகன் கோவிலில் சிறப்பு யாகம்

4 hours ago 2

பழனி,

பழனி முருகன் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு தற்போது பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் வந்து சாமி தரிசனம் செய்வதற்கும், தைப்பூச திருவிழா அனுமதி பெறுவதற்கும் பழனி கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஆனந்தவிநாயகர் சன்னதி முன்பு விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலச பூஜை, பாராயணம், கணபதி யாகம் நடந்தது.

தொடர்ந்து ஆனந்த விநாயகருக்கு 16 வகை அபிஷேகம், பூர்ணாகுதி, கலச அபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து விநாயகரிடம் தைப்பூச திருவிழாவுக்கு அனுமதி பெறப்பட்டது. பின்னர் மூலவர் சன்னதியில் தண்டாயுதபாணி சுவாமியிடம் அனுமதி பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.   

Read Entire Article