பழனி முருகன் கோயிலில் ஆகம ஆசிரியர் மற்றும் அர்ச்சகர்

4 months ago 10

பணியிடங்கள் விவரம்:

1. ஆகம ஆசிரியர் (அர்ச்சகர் பயிற்சி பள்ளி): 1 இடம். சம்பளம்: ரூ.35,900- 1,13,500. தகுதி: ஏதாவதொரு வேத பாடசாலையில் 5 ஆண்டுகள் ஆகம ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
2. அர்ச்சகர் (உபகோவில்): 2 இடங்கள். சம்பளம்: ரூ.11,600-36,800. தகுதி: வேத பாடசாலை அல்லது ஆகம பள்ளியில் ஒரு வருட அர்ச்சகர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
3. ஆத்ேயானப் பட்டர் (மலைக்கோயில்): 1 இடம். சம்பளம்: ரூ.15,900-50,400. தகுதி: வேத பாடசாலை அல்லது ஆகம பள்ளியில் ஒரு வருட ஆத்யானப் பட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
4. தவில் வாசிப்பவர்: 2 இடங்கள். சம்பளம்: ரூ.15,700-50,000. தகுதி: அரசு/மத நிறுவனங்களால் நடத்தப்படும் இசைக் கல்லூரியில தவில் இசைக் கலைஞர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
5. நாதஸ்வரம் வித்வான் (உப கோயில்): 2 இடங்கள். சம்பளம்: ரூ.15,700-50,000, தகுதி: சமய நிறுவனங்கள் அல்லது இசைக் கல்லூரியில் நாதஸ்வர பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
6. தாளக்கலைஞர் (உப கோயில்): 5 இடங்கள். சம்பளம்: ரூ.15,700-50,000. தகுதி: அரசு/ மத நிறுவனங்கள் நடத்தும் இசைக் கல்லூரியில் ஒரு வருட பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
7. மாலை கட்டுபவர்: 1 இடம். சம்பளம்: ரூ.10,000-31,500. தகுதி: பூஜை மற்றும் இதர சமய விழாக்களுக்கு பூ மாலை கட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.07.2024 தேதியின்படி மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.

இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் தமிழ் மொழியில் பேச, எழுத தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். சான்றிதழ்கள் அனைத்தும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/வேத பாடசாலையில் பெற்றதாக இருக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.01.2025.

The post பழனி முருகன் கோயிலில் ஆகம ஆசிரியர் மற்றும் அர்ச்சகர் appeared first on Dinakaran.

Read Entire Article