பழநி, ஜன. 3: பழநியில் செம்மொழி தமிழ்ச்சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில், பொருளாளர் சிவநேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பழநி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
பழநி கோயில் 2வது ரோப்கார் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். தைப்பூசம் நெருங்குவதால் பாதயாத்திரை பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். பழநி வழித்தடத்தில் திருப்பதி, கன்னியாகுமரி, கொச்சின், ராமேஸ்வரம் உள்ளிட்ட ஊர்களுக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post பழநியில் ரோந்து பணியை அதிகரிக்க கோரிக்கை appeared first on Dinakaran.