பழநி, பிப். 14: தொழில் வரி செலுத்தாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பழநி நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மளிகை கடை, ஹோட்டல், டீக்கடை, லாட்ஜ், திருமண மண்டபம், கறிக்கடை உள்ளிட்ட அனைத்து தொழில் செய்யும் வணிக நிறுவனத்தார் 2024- 2025ம் ஆண்டிற்கான தொழில் உரிமம் புதுப்பித்து, தொழில் வரித்தொகையை துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மூலமாக வரும் பிப்28ம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் செலுத்தியிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் செலுத்தக்கூடிய உரிமத்தொகையில் 50% அபராத தொகையாக செலுத்த நேரிடும். மேலும், சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
The post பழநியில் தொழில் வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை appeared first on Dinakaran.