பழநிகோயில் ராஜகோபுரத்தில் யாழி சிலை சேதம்

7 months ago 40

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கடந்த 2023, ஜன.27ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது ராஜகோபுரம், நிழல்மண்டபங்கள் உள்ளிட்டவைகள் புனரமைக்கப்பட்டன. இதில் கோயில் ராஜகோபுரத்தில் உள்ள யாழி சிலையின் மேற்பகுதி சேதமடைந்துள்ளது. இங்கு குரங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. குரங்குகள் ஒன்றோடு ஒன்று சண்டையிடும்போது யாழி சிலை உடைந்திருக்கலாம் என தெரிகிறது. சேதமடைந்த யாழி சிலையை ஆகம விதிப்படி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

40 நாட்கள் ரோப்கார் சேவை நிறுத்தம்: பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு வசதியாக தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப் காரும், மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச்சுகளும் இயக்கப்படுகின்றன. இந்த ரோப் காரில் வரும் அக்.7 முதல் வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்று முதல் 40 நாட்களுக்கு ரோப் கார் இயங்காதெனவும், மலைக்கோயில் செல்லும் பக்தர்கள் படிப்பாதை அல்லது வின்ச்சுகளை பயன்படுத்துமாறும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பழநிகோயில் ராஜகோபுரத்தில் யாழி சிலை சேதம் appeared first on Dinakaran.

Read Entire Article