பழநி மலைக்கோயிலில் உலக நலன் வேண்டி காளையுடன் வழிபாடு

5 days ago 4

பழநி, பிப். 14: பழநி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் கடந்த பிப்.11ல் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் பலர் காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் பழநி அருகே மேல்கரைப்பட்டி கிராம மக்கள் அலங்கரித்த கோயில் காளையுடன் பழநி மலைக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தனர்.

முன்னதாக அடிவாரத்தில் காளையின் கொம்புகளில் பரிவட்டம் கட்டி, மலர்களால் அலங்கரித்தனர். தொடர்ந்து பறை இசை கொட்டியபடி கோயில் பூசாரி தண்டபாணி தலைமையில் கிரிவீதிகளில் வலம் வந்தனர். பின்பு அலங்கரித்த காளையை யானை பாதை வழியாக அழைத்து கொண்டு மலைக்கோயில் சென்றனர். தொடர்ந்து கோயில் வெளிப்பிரகாரத்தில் காளையுடன் சுற்றி வந்தனர். பின்னர் மேற்கு வெளிப்பிரகாரத்தில் காளையை நிறுத்திவிட்டு உலக நலன், விவசாயம் செழிக்க வேண்டி வழிபாடு செய்தனர்.

The post பழநி மலைக்கோயிலில் உலக நலன் வேண்டி காளையுடன் வழிபாடு appeared first on Dinakaran.

Read Entire Article