பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு

2 weeks ago 3


சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வு மாணவ – மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு ‘தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்’ என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ – மாணவிகளுக்கு மாதம் ரூ10,000ம் (6 மாதத்திற்கு) மற்றும் முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு மாதம் ரூ25,000ம் (3 வருடத்திற்கு) உதவித்தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை `https://www.tn.gov.in/forms/deptname/1’ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தினை 2024-2025ம் ஆண்டில் செயல்படுத்த இத்திட்டத்திற்கான விண்ணப்பம் நேற்று (5ம் தேதி) முதல் இணையவழியிலும் மற்றும் இயன்முறையிலும் (ஆப்லைன்) வரவேற்கப்படுகின்றன.

இணையவழியில் விண்ணப்பிக்க விரும்பும் மாணாக்கர் `https://forms.gle/BDdkHTL6Ltkt5ToQ7’ என்ற இணைப்பில் நேரடியாக 30.11.2024-க்குள் விண்ணப்பிக்குமாறும் மற்றும் இயன்முறையில் விண்ணப்பிக்க விரும்பும் மாணாக்கர் `https://www.tn.gov.in/forms/deptname/1’ என்ற இணைப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை இயக்குநர், பழங்குடியினர் நலன், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு 30.11.2024க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

The post பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article