பள்ளியில் புகுந்த குரங்கு விரட்டியடிப்பு

2 days ago 2

 

மதுக்கரை, நவ.22: கோவையை அடுத்த செட்டிபாளையம் அம்பேத்கர் நகரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 3 நாட்களாக குரங்கு ஒன்று வந்துள்ளது. அந்த குரங்குக்கு மாணவர்கள் உணவு கொடுத்து உபசரித்துள்ளனர். இதனால் அந்த குரங்கு அங்கேயே முகாமிட்டு தங்கியது. இந்த விபரம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவந்ததும், உடனே அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து பிடித்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று மதியம் பள்ளிக்கு வந்த வனத்துறையினர், அங்கிருந்த குரங்கை விரட்டியடித்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘மாணவர்களும் அந்த பகுதியில் உள்ளவர்களும் உணவு கொடுத்து வந்ததால், அது எங்கும் செல்லாமல் இங்கேயே சுற்றி திரிகிறது. இனிமேல் குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் வந்தால் அவைகளுக்கு உணவுகள் கொடுக்க வேண்டாம். வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தால் அதனை பிடித்துகொண்டு போய் வனப்பகுதியில் விட்டு விடுகிறோம்’’ என்றார்.

The post பள்ளியில் புகுந்த குரங்கு விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article