பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளந்தை அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில் ஸ்டெம் பயிரலங்கம்

2 weeks ago 2

ஜெயங்கொண்டம், ஜன.26: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் விளந்தை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஸ்டெம் (STEM) பயிரலங்கம் பள்ளிக்கல்வித்துறை அனுமதியுடன் கோரோட் அறக்கட்டளை திருச்சி மாவட்டத்தை மையமாக கொண்டு குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் செயல்பாடுகளை கடந்த 15 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் விளந்தை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 67 மாணவ மாணவிகளுக்கு கோரோட் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவா்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் ஆா்வத்துடன் பயின்று வருங்காலத்தில் அறிவியல் வல்லுநா்களாகவும் புதிய கண்டுபிடிப்புகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒருநாள் ஸ்டெம் பயிலரங்கம் நடைபெற்றது.

கோரோட் அறக்கட்டளையின் அறங்காவலா் பத்மாவதி வசந்தன் மற்றும் பயிற்சியாளா்களாக வசந்தன், மகேஸ்வாி மற்றும் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு அறிவியல் செயல்பாடுகளை மேற்கொண்டனா். அவரின் வழிகாட்டலில் மாணவியர்கள் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலில் ஆர்வம் உருவாக்குவதை வெளிபடுத்தினா். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மைய மேற்பர்வையாளர் அருமைராஜ் வாழ்த்துரை வழங்கி மாணவர்களின் அறிவியல் சார்ந்த ஆர்வத்தை ஊக்குவித்தார்.

இப்பயிலரங்கத்தில் அறிவியல் ஆசிரியர் சிவலிங்கம், கணித ஆசிரியர், ஆனந்தி, சமூக அறிவியல் ஆசிரியர், பழனியப்பா மற்றும் ஆங்கில ஆசிரியர் சந்திரா மற்ற துறை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளந்தை அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில் ஸ்டெம் பயிரலங்கம் appeared first on Dinakaran.

Read Entire Article