பள்ளிக் கல்வி நலத்திட்டங்கள் கண்காணிப்பு அதிகாரிகள் திருத்தப் பட்டியல் வெளியீடு

1 month ago 6

சென்னை: பள்ளிக் கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை கண்காணிப்பதற்காக ஏற்கெனவே நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பட்டியலில் திருத்தப் பட்டியலை தற்போது பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் மூலம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்காக அறிவிக்கப்பட்ட நலத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், மாதம் ஒரு முறை அந்தந்த மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பள்ளிக்கல்வித் துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதி கடந்த மாதம் அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிட்டு இருந்தார்.

அதன்படி 38 மாவட்டங்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் திருத்தம் செய்து புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்டக் கண்காணிப்பாளராக தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உமா, திருவள்ளூர் மாவட்டத்துக்கு தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாதம் ஒருமுறையாவது அந்தந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று நலத்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து பள்ளிக்கல்வித் துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பள்ளிக் கல்வி நலத்திட்டங்கள் கண்காணிப்பு அதிகாரிகள் திருத்தப் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article