பள்ளிகளுக்கு கோடை விடுமுறை; திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கானோர் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்: பெருந்திட்ட வளாகப் பணிகள் தீவிரம்

1 week ago 4

திருச்செந்தூர்,: பள்ளிகளுக்கு கோடை விடுமுறையால் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாகத்தையொட்டி பிரகாரத்தில் பெருந்திட்ட வளாகப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூரில் திருவிழா காலங்களிலும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் குவிந்து விடுவார்கள். தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலாவாகவும், ஆன்மீக வழிபாட்டுக்காகவும் திருச்செந்தூருக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமாகி தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. கோடை விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வளர்பிறை முகூர்த்தத்தில் திருமணம் முடிந்த ஜோடிகளும் சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர்.

தெற்கு கிரிப்பிரகாரத்தில் பணிகள் தீவிரம்
திருச்செந்தூர் கோயிலில் தற்போது ரூ.300 கோடி செலவிலான பெருந்திட்ட வளாகப் பணிகள் மற்றும் ஜூலை 7ல் நடைபெற உள்ள கும்பாபிஷேக திருப்பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோயில் சண்முக விலாசம் மண்டபம் முன்புள்ள தெற்கு பிரகாரம் பகுதிகளில் தரைத்தளம் சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. மேலும் ஜூன் 9ம் தேதி வைகாசி விசாகம் நடைபெற உள்ளதாலும் கிரிப்பிரகார பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

The post பள்ளிகளுக்கு கோடை விடுமுறை; திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கானோர் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்: பெருந்திட்ட வளாகப் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article