பள்ளி வாகன விபத்து என கூறி ஒன்றிய அமைச்சரிடம் பணம் பறிக்க முயற்சி

1 week ago 3

பள்ளி வாகன விபத்து என கூறி ஒன்றிய அமைச்சரிடம் பணம் பறிக்க முயற்சி

மும்பை: மகாராஷ்டிராவின் மும்பையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கூறுகையில், ‘‘நான் நேற்று (நேற்று முன்தினம் ) பீகார் சென்றிருந்தேன். அப்போது எனது செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது. மகாராஷ்டிராவின் அஹில்யா நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடியில் இருந்து ஆசிரியர் ஒருவர் பேசுவதாக கூறினார். பள்ளி வாகனம் விபத்தில் சிக்கிவிட்டதாகவும், 8-10 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களது சிகிச்சைக்காக ஜி-பே மூலமாக பணம் அனுப்பிவைக்கும்படியும் கோரிக்கை விடுத்தார். எந்த பள்ளி வாகனமும் விபத்தில் சிக்கவில்லை என்று காவல்துறை மூலமாக கண்டறிந்தேன். எனக்கு வந்த மோசடி எண்ணை விசாரணைக்காக வழங்குவேன். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

The post பள்ளி வாகன விபத்து என கூறி ஒன்றிய அமைச்சரிடம் பணம் பறிக்க முயற்சி appeared first on Dinakaran.

Read Entire Article