வாரணாசி: வாரணாசி தமிழ் சங்கமம் கடந்த 15ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற இந்த விழா நேற்று நிறைவடைந்தது. உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் கடந்த பிப்ரவரி 15 ம் தேதி காசி தமிழ் சங்கமம் தொடங்கியது. காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான தொன்மை , நாகரீக பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் நடந்த இந்த கலாச்சார நிகழ்வுக்கு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் உத்தரப்பிரதேச அரசின் ஒத்துழைப்புடன் ஒன்றிய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் தமிழ்நாடு மற்றும் உ.பி யை சேர்ந்த அறிஞர்கள், மாணவர்கள், தத்துவ ஞானிகள்.
கலைஞர்கள், கைவினைஞர்கள் பங்கேற்றனர். நமோ படித்துறையில் நேற்று நிறைவு விழா நடந்தது. இதில் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஞ்சி, மத்திய இணை அமைச்சர் சுகந்த மஜூம்தார் உள்ளிட்டோர் சிறப்பித்தனர்.
The post காசி தமிழ் சங்கமம் நிறைவு appeared first on Dinakaran.