
சேலம்
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட, வெள்ளாளபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் ஆண்டனி (வயது 50) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தாரமங்கலம், காட்டு பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் 2-ம் வகுப்பு படித்து வரும் 7 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் நேற்று கொங்கணாபுரம் வட்டார கல்வி அலுவலர் செந்தில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சேலம் போலீசார், ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.