பள்ளி மாணவிகளுக்கு அறிவுரை புத்திசாலி குழந்தையை பெற்றெடுப்பது எப்படி? பெண் டிஐஜி பேச்சால் சர்ச்சை

3 weeks ago 7

சாதோல்: மத்தியபிரேதச மாநிலம் சாதோலில் உள்ள தனியார் பள்ளியில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அரசின் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 4ம் தேதி நடந்தது. இதில் பெண் டிஐஜி சவிதா சோகனே மாணவிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார். திருமணமாகாத அந்த பெண் டிஐஜி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி உள்ளது. அதில் டிஐஜி சவிதா, ‘‘நான்காவது புதிய தலைமுறையை நீங்கள்தான் கொண்டு வரப்போகிறீர்கள்.

அதை எப்படி செய்யப் போகிறீர்கள்? அதற்கு நீங்கள் திட்டமிட வேண்டும். நான் சொல்லும் விஷயங்களை கவனியுங்கள். பவுர்ணமி தினத்தில் கருத்தரிப்பு செயல்களில் ஈடுபடக் கூடாது. புத்திசாலி சந்ததியை பெற்றெடுக்க அதிகாலையில் சூரியனுக்கு தண்ணீரை காணிக்கையாக்கி வணங்கி வழிபடுங்கள்’’ என்றார்.

இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் பதிலளித்த டிஐஜி சவிதா, ‘‘வேதங்களில் நான் படித்ததையும், இந்து ஆன்மீகவாதிகள் பிரசங்கங்களில் கேட்டதையும் தான் பேசினேன். நான் காவல் துறையில் சேரும் முன், 31 ஆண்டுக்கு முன்பு பள்ளியில் 4 ஆண்டு சொற்பொழிவாற்றியிருக்கிறேன். இந்து மதத்தில் பவுர்ணமி புனிதமான காலமாக கருதப்படுவதால் அந்த சமயத்தில் கருத்தரிக்க கூடாது என்றேன். ஒருமணி நேரத்திற்கும் மேலான எனது பேச்சில் சிறு பகுதியை மட்டும் வெளியிட்டு சர்ச்சையாக்கப்பட்டுள்ளது’’ எனக்கூறினார்.

The post பள்ளி மாணவிகளுக்கு அறிவுரை புத்திசாலி குழந்தையை பெற்றெடுப்பது எப்படி? பெண் டிஐஜி பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.

Read Entire Article