பள்ளி மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்த விவகாரம் - தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

5 hours ago 4

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெருங்காடு மலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கழிவறையை சுத்தம் செய்வது, கழிவறையில் தண்ணீர் நிரப்புவது உள்ளிட்ட பணிகளை, 5-ம் வகுப்பு பயிலும் 3 மாணவிகள் செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியை கூறியதாக தெரிகிறது.

இதுதொடர்பாக பெற்றோர் புகார் அளித்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தலைமை ஆசிரியை கலைவாணியை சஸ்பெண்ட் செய்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உத்தரவிட்டுள்ளார்.

Read Entire Article