பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்துக: ஈரோடு கொலை சம்பவத்தை முன்வைத்து தமாகா கோரிக்கை

4 hours ago 3

சென்னை: “பள்ளிகளில் மாதந்தோறும் குறைந்தபட்சம் ஒரு நாள் ஒழுக்கக் கல்வி நிகழ்ச்சி, தனி நேர வகுப்பு மற்றும் மதிப்பெண்கள் அளவீடு ஆகியவற்றை பின்பற்ற அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா வெளியிட்ட அறிக்கையில், “ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை அன்று ஆதித்யா என்ற மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பள்ளி மாணவியரிடம் பேசிய விவகாரத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல், 17 வயது மாணவர் ஆதித்யாவின் உயிரை பறித்துள்ளது என்பது மிகவும் வேதனைக்குரிய, நிகழ்வாகும்.

Read Entire Article