பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன்ள்: இழப்பீடு வழங்கக் கோரி மனு

2 weeks ago 2

 

மதுரை, ஜன. 21: இந்திய மாணவர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் டேவிட் ராஜதுரை தலைமையில், துணைத் தலைவர் டீலன் ஜெஸ்டின், வாலிபர் சங்க பகுதி செயலாளர் கவுதம் பாரதி உள்ளிட்டோர் மதுரை கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, பழங்காநத்தம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் மாடியில் இருந்து தவறி விழுந்த 5ம் வகுப்பு மாணவன் அகிலனுக்கு (10) தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், மாணவனின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் மாணவனை ஆறு மாதங்கள் வீட்டிலிருந்து ஓய்வு மற்றும் மேல் சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். குடும்பத்தினர் உடனிருந்து மாணவனை கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதால் அவர்களால் கூலி வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் அந்த குடும்பமே பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். எனவே, காலதாமதமின்றி இழப்பீடு வழங்கிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர்.

The post பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன்ள்: இழப்பீடு வழங்கக் கோரி மனு appeared first on Dinakaran.

Read Entire Article