பள்ளி பஸ் மீது லாரி மோதி விபத்து

3 months ago 20

அரூர், அக்.8: அரூர் அருகே பள்ளி பஸ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். அரூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி வந்து செல்ல வசதியாக பள்ளி சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று பள்ளி விட்டதும் மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் புறப்பட்டது. அரூர் நோக்கி வளைவில் திரும்பியபோது சேலம் பகுதியிலிருந்து அரூர் நோக்கி வந்த டிப்பர் லாரி ஒன்று பள்ளி பஸ்சின் மீது மோதியது. இதில், பள்ளி பஸ் பலத்த சேதமடைந்தது. இரண்டு குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பள்ளி பஸ் மீது லாரி மோதி விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article