பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் ஜாதி பெயர் நீக்கப்படுமா?: அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு!

3 months ago 8

சென்னை: பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள ஜாதி பெயர்கள் நீக்கப்படுமா என அரசு விளக்கம் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர் பள்ளிக்கு சூட்டப்பட்டிருக்கும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி;

சாதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள சங்கத்தை, சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். சாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் சாதிப் பெயருடன் உள்ள நிலையில், அங்கு ஆசிரியர் “சாதிகள் இல்லையடி பாப்பா” எனப் பாடம் நடத்துவது பெரிய முரண். சில அரசு பள்ளிகளில் கூட ஜாதி பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்த நிலையில், அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்.25ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் ஜாதி பெயர் நீக்கப்படுமா?: அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு! appeared first on Dinakaran.

Read Entire Article