பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

4 months ago 13

தொண்டி, ஜன.9: திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து ஆரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு தொண்டி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவாடானை ஒன்றியத்தில் பணியாற்றும் 4 மற்றும் 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வட்டார கல்வி அலுவலர் புல்லாணி தொடங்கி வைத்தார். பயிற்சியில் 79 தலைமை ஆசிரியர் உட்பட 132 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இது குறித்து அவர் கூறுகையில், எண்ணும் எழுத்து பயிற்சியின் மூலம் அனைத்து மாணவர்களும் எழுத படிக்க கற்றுக் கொண்டனர். தற்போது அரசு மணற்கேணி என்ற செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலும் அனைத்து பாடங்களை நடத்தும் முறை குறித்து ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் நீட் தேர்வு உள்ளிட்ட தகுதி தேர்வு முறைகளையும் தெரிந்து கொள்ளலாம். இதனை அனைத்து ஆசிரியர்களும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றார். மலர் சரண்யா பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

The post பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article