மும்பை,
மராட்டிய மாநிலம் பல்ஹர் மாவட்டத்தை சேர்ந்தவர் டடு ஜிது ஜுக்ரா (வயது 69). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியரான இவர் தானே மாவடத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில், ஜுக்ரா தனது குடும்பத்துடன் நேற்று சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டார். காரில் 8 பேர் பயணித்தனர். தானே மாவட்டம் சாஹாபூர் தாலுகா விஹிகான் கிராமம் அருகே மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஜுக்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் 7 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.