பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் அமைச்சுப் பணியாளர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு மே 26 முதல் ஜூன் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட அமைச்சுப் பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமாகும். அதேபோல், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2025-26 கல்வியாண்டில் அமைச்சுப் பணியாளர்களுக்கு இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.