பல்வேறு முத்தான திட்டங்களுடன் ரூ.45,661 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

3 hours ago 4

சென்னை: வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2025 – 26ம் ஆண்டிற்கான வேளாண் மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

இந்நிலையில் வேளாண் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;

நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில்,

*வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு,

*முதலமைச்சரின் 1000 உழவர் நலச் சேவை மையங்கள்,

*புதிய தொழில்நுட்பங்கள்,

*சிறு குறு விவசாயிகள் நலன்,

*மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்,

*டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம்,

*வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதியுதவி

எனப் பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 வெளியிடப்பட்டுள்ளது.

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்!. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

The post பல்வேறு முத்தான திட்டங்களுடன் ரூ.45,661 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Read Entire Article