பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

1 week ago 1

ஊட்டி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஊட்டியில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையினை கருத்தில் கொண்டு அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.

மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும்.

வருவாய் பேரிடர் பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு திட்ட பணி அலுவலகங்களில் கலைக்கப்பட்ட 20 துணை ஆட்சியர் பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல், சரண் விடுப்பு வழக்குதல் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

அரசின் சிறப்பு திட்டங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணும் நேர்வில் அனைத்து வட்டங்களுக்கும் சிறப்பு துணை வட்டாட்சியர் பணியிடம் ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பொன்.பொதிகைநாதன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article