பல்லடம் அருகே 3 பேர் கொல்லப்பட்ட விவகாரம் - சிக்காமல் உள்ள துப்பு.!

15 hours ago 2
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, நவம்பர் 29ஆம் தேதியன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், 14 தனிப்படைகள் அமைத்தும் துப்புத்துலக்குவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 850 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பல்லடம் சம்பவத்தோடு ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருவதாக, போலீசார் தெரிவித்தனர். சென்னிமலை, காங்கேயம் பகுதிகளில் நடந்த மூதாட்டி ஒருவரின் கொலை, பல்லடம் சம்பவத்துடன் ஒத்துப்போவதாக கூறப்படுவதால், அதுகுறித்த விசாரணையையும், தனிப்படை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளதாக, கூறப்படுகிறது. 
Read Entire Article