பல்லடம், ஜூலை 6: பல்லடத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் விவசாயிகள் வீரவணக்க நாள் பேரணி நேற்று நடந்தது. 1972ம் ஆண்டு ஒரு பைசா மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாய தியாகிகள் நினைவு தினத்தையொட்டி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பல்லடத்தில் விவசாயிகள் வீரவணக்க நாள் பேரணி நேற்று நடந்தது.
பல்லடம் அரசு கலைக்கல்லூரி முன்பு பேரணியை மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மகாலிங்கம், காட்டூர்புதூர் ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர். இதில், திருப்பூர் மாவட்ட செயலாளர் முகிலன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் பாலு, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கிருஷ்ணவேணி, மகளிரணி லீலாவதி, தேவி, சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி பல்லடம் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று கடை வீதியை சென்றடைந்தது. அங்கு விவசாயிகள் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
The post பல்லடத்தில் விவசாயிகள் வீரவணக்க நாள் பேரணி appeared first on Dinakaran.