பல்லடத்தில் நாளை கடையடைப்பு வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

4 months ago 15

பல்லடம், டிச.17: பல்லடத்தில் 18ம் தேதி புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அச்சங்க தலைவர் ஆனந்தா செல்வராஜ், செயல்தலைவர் பானு பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கம், திருப்பூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், ஜவுளிக்கடை உரிமையாளர்கள் சங்கம், கட்டிட பொறியாளர்கள் சங்கம், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது.

இதில் சொத்து வரி உயர்வு, வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி, குப்பை வரி, மின் கட்டண உயர்வு போன்றவற்றால் ஏற்பட்டுள்ள தொழில் முடக்கத்தை கண்டித்து 18ம் தேதி புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பல்லடத்தில் நாளை கடையடைப்பு வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article