பல்கலை.களில் விரைவில் துணைவேந்தர் நியமனம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

1 month ago 5

திருவாரூர்: திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் இயங்கி வரும் திரு.வி.க அரசு கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமை வகித்து 1,131 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:  இந்தியாவிலேயே இன்று தமிழகம் தான் உயர்கல்வியில் முதலிடம் வகித்து வருகிறது. இதற்கு காரணம் மாணவர்கள் படிக்க வேண்டும் என மறைந்த தலைவர் கலைஞர் பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தியதுதான்.

இதன் காரணமாகவே நடுத்தர ஏழை, எளிய குடும்பத்தினர் பலரும் இன்று ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக பல்வேறு பணிகளில் இருந்து வருகின்றனர். கிராமப்புற மாணவர்களுக்கென 15 சதவிகித இடஒதுக்கீடு காரணமாக இன்று ஏராளமான பெண்கள் பட்டதாரிகளாக உருவாகி பணிகளில் இருந்து வருகின்றனர். பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வினை அகற்றியதன் காரணமாக 22,000த்திலிருந்து இன்று ஆண்டொன்றுக்கு 77,000 பேர் பொறியியல் படித்து வருகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் பேசினார். இதை தொடர்ந்து அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறும்போது, பல்கலைக்கழகங்களில் கூடிய விரைவில் அனைத்து உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி கலந்து ஆலோசித்து முறையாக, சரியாக, சட்டப்படி, உரிமைப்படி முதல்வரின் ஆலோசனையை பெற்று துணைவேந்தர்கள் நியமனம் நடைபெறும் என்றார்.

The post பல்கலை.களில் விரைவில் துணைவேந்தர் நியமனம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article