ஏறிய வேகத்தில் இறங்குகிறது தங்கம் சவரனுக்கு ரூ.1,560 குறைந்தது: 3 வாரத்தில் ரூ.5440 சரிவு

5 hours ago 3

சென்னை: தங்கத்தின் விலை ஏறிய வேகத்தில் இறங்கி வருகிறது. சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் ரூ.68,880க்கு விற்பனையானது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் தினம், தினம் புதிய உச்சத்தை பதிவு செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் நேற்று முன்தினம் (மே.14) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.70,440க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.8,805க்கு விற்பனையானது. நேற்றும் (மே 15) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 அதிரடியாக குறைந்து ஒரு சவரன் ரூ.68,880க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது தங்கம் கிராமுக்கு ரூ.195 குறைந்து ரூ.8,610க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும் கடந்த 3 வாரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5440 குறைந்துள்ளது. அதேபோல் ஒரு வாரத்தில் சவரனுக்கு ரூ.4160 குறைந்துள்ளது. தங்கம் விலை ஏறிய வேகத்தில், இறங்கி வருவதால் நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரை, கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.108க்கும், ஒரு கிலோ ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post ஏறிய வேகத்தில் இறங்குகிறது தங்கம் சவரனுக்கு ரூ.1,560 குறைந்தது: 3 வாரத்தில் ரூ.5440 சரிவு appeared first on Dinakaran.

Read Entire Article