திருவனந்தபுரம்: விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவை பார்க்கும் பலருக்கு தூக்கம் பறிபோயிருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவில் பினராயி விஜயன், சசி தரூர் கலந்து கொண்டுள்ளனர். இண்டியா கூட்டணியின் முக்கிய தலைவர்களான பினராயி விஜயன், சசி தரூர் என்னுடன் மேடையில் உள்ளனர். கேரளா வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்கு விழிஞ்சம் துறைமுகம் ஒரு உதாரணம். விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும். பெரிய சரக்குக் கப்பல்களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, சிங்கப்பூர் போன்ற துறைமுகங்களை இந்தியா சார்ந்திருப்பதை விழிஞ்ஞம் துறைமுகம் குறைக்கும் என்றும் கூறினார்.
The post பலரின் தூக்கத்தை கலைக்கும் நிகழ்வு இது – பிரதமர் மோடி appeared first on Dinakaran.