ஆந்திரா வனப்பகுதியில் யானை தாக்கி 3 பக்தர்கள் பலி

2 hours ago 1

அமராவதி,

ஆந்திர பிரதேச மாநிலம் அன்னமையா மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் அமைத்துள்ள தலகோணா கோவிலுக்கு 30 பேர் கொண்ட பக்தர்கள் குழு இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த யானைகள் குழு அவர்களை தாக்கியது. இதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 பேரில் இருவர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் இருந்து தப்பிய பக்தர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டபோது இறந்த பக்தர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article