தேவையானவை:
பருத்திக்கொட்டை ஒரு கைப்பிடி பச்சரிசி மாவு 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
வெல்லம் தேவையானது
சுக்கு தூள் 1/2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் 1/4 ஸ்பூன்
மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
செய்முறை:
பருத்தி கொட்டைகளை நன்கு கழுவி ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். இரவே ஊறவைத்து விட்டால் காலையில் செய்ய சுலபமாக இருக்கும். ஊறிய பருத்திக் கொட்டைகளை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்கவும். இரண்டு முறை அரைத்து வடிகட்டி பால் எடுத்து வைக்கவும்.துருவிய தேங்காயை சிறிது வெதுவெதுப்பான நீர் விட்டு அரைத்து கெட்டியான தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். பருத்திப்பாலை அரிசி மாவுடன் சேர்த்து கலந்து கொதிக்க விடவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து ஒரு கொதி வந்ததும் வடிகட்டி பருத்தி பாலுடன் சேர்த்து கொதிக்க விடவும்.ஏலக்காய்த்தூள், சுக்கு தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு கொதித்ததும் எடுத்து வைத்த தேங்காய் பால் கலந்து கொதி வருவதற்கு முன் எடுத்து விடவும். தேங்காய்ப்பால் விட்டதும் கொதிக்க விட வேண்டாம். பரிமாறும் பொழுது பருத்தி பாலை விட்டு மேலாக சிறிது தேங்காய் துருவல் சேர்த்து பருக உடலுக்கு மிகுந்த பலம் தரும் பருத்தி பால் தயார்.
The post பருத்திப் பால் appeared first on Dinakaran.