விருதுநகர், ஜன.8: தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து விருதுநகரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், ஒன்றிய அரசின் மீதான தமிழக மக்களின் கோபத்தை திசைமாற்றும் வகையில் செயல்படும் அதிமுக, பாஜகவை கண்டித்தும் விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் நகர செயலாளர் தனபாலன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மேயர் சங்கீதா இன்பம், மாநகர செயலாளர் உதயசூரியன், நகர்மன்ற தலைவர் மாதவன், நிர்வாகிகள் சுப்பாராஜ், மதியழகன், ராஜகுரு, மல்லி ஆறுமுகம், நகர, ஒன்றிய நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
The post திமுக சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.