பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த "கருப்பி" என்ற பெண் சிப்பிபாறை நாய் பேருந்து மோதி இறப்பு.!

2 months ago 14
கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான "பரியேறும் பெருமாள்" படத்தில் கதாநாயகன் கதிர் அவர்களின் செல்ல நாயாக "கருப்பி" என்னும் சிப்பிபாறை வகை பெண் நாய் நடித்தது. இந்த நாய் அந்த படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் அவர்களின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது. இந்த நாய் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இடம் பெற்றிருக்கும். படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சினிமா ரசிகர்கள் பலராலும் இந்த நாய் நேசிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி அன்று திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமத்தில் தனது வீட்டில் இருந்த கருப்பி நாய் பட்டாசு சத்தம் கேட்டு மிரண்டு போய் சாலையை நோக்கி ஓடியது. அப்போது அந்த வழியில் வந்த பேருந்தில் மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. கருப்பி நாயின் உடலை மீட்ட நாயின் உரிமையாளரும் ஊரைச் சேர்ந்தவர்களும் கருப்பிக்கு மாலை அணிவித்து இறுதி சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்தனர். பண்டிகை காலங்களில் இது போன்று விலங்குகளுக்கு ஏற்படும் விபத்துக்களையும் ஆபத்துக்களையும் தடுக்க மக்கள் விழிப்புணர்வோடு பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்று கால்நடை மருத்துவர்களும் விலங்குகள் நல ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
Read Entire Article