காட்பாடி,
தெற்கு மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருப்பதி மற்றும் காட்பாடி இடையில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் 50 நிமிடங்களும், காட்பாடி ரெயில் நிலையத்தில் 70 நிமிடங்களும் ஒழுங்குபடுத்தப்படும். இந்த மாற்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
திருப்பதியில் இருந்து காலை 10.35 மணிக்கு காட்பாடி நோக்கி புறப்படும் திருப்பதி- காட்பாடி மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பதி- காட்பாடி இடையில் தேவைக்கேற்ற வசதியான இடத்தில் 60 நிமிடங்கள் ஒழுங்குபடுத்தப்படும். இந்த மாற்றம் இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.