
கோவை,
வடகோவை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மேட்டுப்பாளையம்-போத்தனூர் மெமு ரெயில் இன்று ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவையை அடுத்த வடகோவை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம்-போத்தனூர் மெமு ரெயில் (எண்:66611) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில் இன்று போத்தனூரில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரெயில் (எண்: 66612) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
ஆலப்புழை -தன்பாத்
இதுபோன்று வடகோவை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ஆலப்புழை-தன்பாத் விரைவு ரெயில் (எண்: 13352) போத்தனூர்-இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால் அந்த ரெயில் கோவை ரெயில்நிலையம் செல்லாது. மாறாக போத்தனூருக்கு தற்காலிகமாக செல்லும்.
இதேபோல் எர்ணாகுளம்-பெங்களூரு விரைவு ரெயில் (எண்: 12678) போத்தனூர்-இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால் அந்த ரெயில் கோவை ரெயில்நிலையம் செல்லாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.