
சென்னை,
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.