![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38097165-minsara-rail.webp)
சென்னை,
மக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை சில மின்சார ரெயில்களின் சேவை முழுமையாகவோ அல்லது பகுதி நேரமாகவோ ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
*காட்பாடியில் இருந்து இரவு 9.10 மணிக்கு திருப்பதி செல்லும் மின்சார ரெயில் (வண்டி எண்: 67210) வரும் பிப்ரவரி 10, 12, 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
*திருப்பதியில் இருந்து இரவு 7.10 மணிக்கு காட்பாடி செல்லும் மின்சார ரெயில் (வண்டி எண்: 67209) வரும் பிப்ரவரி 10, 12, 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
*சென்னை கடற்கரையில் இருந்து இரவு 6.00 மணிக்கு திருவண்ணாமலை செல்லும் மின்சார ரெயில் (வண்டி எண்: 66033) வரும் பிப்ரவரி 10, 12, 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
*திருவண்ணாமலையில் இருந்து காலை 4.30 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் (வண்டி எண்: 66034) வரும் பிப்ரவரி 11, 13, 15 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
*காட்பாடியில் இருந்து காலை 9.30 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் மின்சார ரெயில் (வண்டி எண்: 06417) வரும் பிப்ரவரி 10, 12, 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
*ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 12.45 மணிக்கு காட்பாடி செல்லும் மின்சார ரெயில் (வண்டி எண்: 06418) வரும் பிப்ரவரி 10, 12, 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
*அரக்கோணத்தில் இருந்து இரவு 9 மணிக்கு காட்பாடி செல்லும் மின்சார ரெயில் வரும் பிப்ரவரி 10, 12, 14 ஆகிய தேதிகளில் முந்தைய நிறுத்தமான சேவூர் வரை செல்லும்.
*விழுப்புரத்தில் இருந்து இரவு 08.10 மணிக்கு காட்பாடி செல்லும் மின்சார ரெயில் வரும் பிப்ரவரி 10, 12, 14 ஆகிய தேதிகளில் வேலூர் கண்டோன்மென்ட் வரை செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.